Homeபிற செய்திகள்பி.கே.ஆர். கல்லூரியில் உலக விண்வெளி வார நிகழ்ச்சி: 780 மாணவர்கள் பங்கேற்பு

பி.கே.ஆர். கல்லூரியில் உலக விண்வெளி வார நிகழ்ச்சி: 780 மாணவர்கள் பங்கேற்பு

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உந்துவிசை வளாகத்துடன் (ஐபிஆர்சி) இணைந்து உலக விண்வெளி வாரம் 2026 நிகழ்ச்சி  நடைபெற்றது.
 கல்லூரியின் தாளாளரும் செயலருமான பி.என். வெங்கடாசலம் தலைமை வகித்தார். முதல்வர் பொறுப்பு வகிக்கும் எஸ்.ஏ. தனலட்சுமி முன்னிலை வகித்தார்.
 இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில், என்ஜின் அசெம்பிளி மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவில் விஞ்ஞானி மற்றும் பொறியாளராகப் பணியாற்றும் ஈ.என். ஸ்வாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
 அப்போது, விண்வெளி அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக்கோள் தொழில்நுட்பம், இஸ்ரோவின் சாதனைகள் மற்றும் விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள எதிர்கால வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
 நிகழ்ச்சியில் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 230 மாணவிகளும், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 550 மாணவ, மாணவிகளும் என மொத்தம் சுமார் 780 பேர் பங்கேற்றனர். மாணவர்கள் விண்வெளி அறிவியல் தொடர்பான தங்களது சந்தேகங்களை விஞ்ஞானியிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img