Homeபிற செய்திகள்பிரவீன் செஸ் அகாடமி சார்பில்மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

பிரவீன் செஸ் அகாடமி சார்பில்மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

ஒன்பதாவது பிரவீன் செஸ் அகாடமி தமிழ்நாடு மாநில அளவு சதுரங்கப் போட்டி, ஈரோடு செங்கோடம்பாளையம் அருகில் உள்ள பரிமளா மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரவீன் செஸ் அகாடமி ஏற்பாடு செய்த இப்போட்டிக்கு தமிழ்நாடு மாநில சதுரங்கச் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்கக் குழு  அனுமதி வழங்கியிருந்தன.
 திறந்த பிரிவில் மொத்தம் ரூ.25,000 ரொக்கப் பரிசுத் தொகை 20 வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
 திறந்த பிரிவு ரொக்கப் பரிசுகளுடன் (ரூ.2 லட்சம்), மொத்தம் 800 பரிசுகளும் 100 பொதுவான கோப்பைகளும் வழங்கப்பட்டன. 8 வயதிற்கு உட்பட்டோர், 10, 12, 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆண், பெண் பிரிவுகளில் தனித்தனிப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 பிரவீன் செஸ் அகாடமியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ். பிரவீன் குமார் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு மாநில சதுரங்கச் சங்கத்தின் இணைச் செயலாளர் எஸ். ரமேஷ், அகாடமித் தலைவர்கள் சிவசங்கர் மற்றும் வேதநாயகி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். 

படிக்க வேண்டும்

spot_img