fbpx
Homeபிற செய்திகள்உலக ஐவிஎஃப் தினம் - சேலத்தில் கருவுறாமை விழிப்புணர்வு வாக்கத்தான்

உலக ஐவிஎஃப் தினம் – சேலத்தில் கருவுறாமை விழிப்புணர்வு வாக்கத்தான்

உலக ஐவிஎஃப் தினத்தை முன்னிட்டு, சேலம் நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மையம், குழந்தையின்மை விழிப்புணர்வுக்கான நடைப் பயணத்தை (வாக்கத்தான்) ஜூலை 26 அன்று ஏற்பாடு செய்தது. இந்த நடைபயணம், குழந்தையின்மை குறித்தும் அது தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குழந்தையின்மை தொடர்பான தவறான கருத்துக்களை நீக்குவதையும் நோக்கமாகக் நடத்தப்பட்டது.


சேலம் நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மைய வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த 2 கி.மீ நடைப்பயண நிகழ்வில், மருத்துவ வல்லுநர்கள் உட்பட பொதுமக்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த நடைப்பயணத்தில், ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதல் ஆரோக்கியத்திற்கான ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.


சேலம், நோவா ஐவிஎஃப் மைய கருவுறுதல் ஆய்வில், இந்தப் பகுதியில் காணப்படும் குழந்தையின்மைக்கான முக்கிய காரணங்கள் என, 15% நோயாளிகள் பிசிஒஎஸ் (ஹார்மோன் சமநிலையின்மை) பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் தடைகளை எதிர்கொள்கின்றனர்.


அத்துடன் 10% பெண்கள், எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை உள்தோலைப் போன்ற திசுக்கள் கருப்பை வெளியே வளரும் நிலை) காரணமாக கருவுறாமை நிலையை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில் கருவுறாமை பிரச்சனை தவிர வேறு எந்த முக்கிய அறிகுறிகள் தென்படுவதில்லை. சில நேரங்களில் மாதவிடாய் காலத்தில் கடும் வலியும் ஒரு அறிகுறியாக இருக்கலாம். சில பெண்களுக்கு “கருப்பை இருப்பு” பிரச்சனை ஏற்படவும் வாய்புள்ளது. பெண்கள் பெரும்பாலும் கருவுறாமை குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவதை தாமதப்படுத்துகிறார்கள்.


நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மையத்தின் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர் ஸ்ரீஅபிநயா கூறியதாவது: கருவுறுதல் சவால்கள் மற்றும் பிரச்சனைகளைத் தடுக்க, பெண்களும் அவர்கள் குடும்பங்களும் கருத்தரிப்பு ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் கருவுறுதலுக்கான அடித்தளம் இளமைப் பருவத்திலேயே தொடங்குகிறது; இளம் பெண்கள் மற்றும் இளம் ஆண்ககளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, புகைபிடித்தல்/ குடிப்பழக்கத்தில் இருந்து விலகி இருப்பது, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் பிசிஒஎஸ் தடுப்பு பற்றி கற்றுக்கொடுத்தல் அவசியம்.


ஆண்களால் ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனைகளில் அவர்கள் கிட்டத்தட்ட சமமாக பங்களிப்பை எதிர்கொள்கின்றனர். இதற்கான ஆரோக்கியம் குறித்து நாம் ஆண்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே கருவுறுதல் பிரச்சினைகள் எதிர்கொள்கிறார்கள் என்ற தவறான கருத்து உள்ளது.


இந்தியாவில் கருவுறுதல் சிகிச்சைகளில் புதிய கண்டுபிடிப்புகள் என்பது, செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு இயக்கப்படும் கரு தேர்வு, மரபணு சோதனை ஆரோக்கியமான தாய்மையை உறுதி செய்கிறது.”


உலக ஐவிஎஃப் தினம் மற்றும் கருவுறாமை விழிப்புணர்வுக்கான நடைப்பயணம், கருவுறாமை குறித்து சமூகத்திற்கான புரிதலை ஏற்படுத்தவும், இந்த மருத்துவ நிலை குறித்த வெளிப்படையான கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு படியாக அமையும். இந்த நடைப்பயணத்திற்கான கருப்பொருள் “நம்பிக்கையைக் கொண்டாடுதல், அறிவியலை முன்னேற்றுதல்” என்பதாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img