fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சர்வதேச சிலம்பம் போட்டி

கோவையில் சர்வதேச சிலம்பம் போட்டி

மறைந்த இ.ஏ.பழனிச்சாமி கவுண்டர் நினைவாக கோவையில் சர்வதேச சிலம்பம் போட்டிகளை நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன் துவக்கிவைத்தார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன் ஆகியோரது, தந்தை மறைந்த இ.ஏ.பழனிச்சாமி கவுண்டர் நினைவாக சர்வதேச சிலம்பம் போடிகள் கோவை எல்-டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன் துவக்கிவைத்தார்.

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு வயது, எடை, உயரம் அடிபடையில் பத்திற்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.

வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு வெற்றி கோப்பைகளும், சான்றிதழ்களுடன் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர், வீராங்கணைகள் அனைவருக்கும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக உலக சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் முனைவர் சுதாகர், உலக சிலம்பம் தொழில்னுட்ப இயக்குனர் சித்தர் துரைசாமி, உலக சிலம்பம் தொழில்னுட்ப இணை இயக்குனர் முனைவர் எஸ்.எ.வி சின்னச்சாமி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் செல்வதுரை மற்றும், உலக சிலம்பம் விளையாட்டு சங்க மாநில செயலாளர் முனைவர் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த போட்டிகளை fighters academy, hayasika செயலாளர் ரமேஷ் ஒங்கிணைத்து நடத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img