சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லம் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
மேலும் குழந்தை களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது. அதில் பொது மருத்துவம் மற்றும் பல் உறுதி தன்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு தேவையான ஆலோசனைகளை வழங் கினர்.
நல உதவி வழங்கும் நிகழ்ச்சியில் லக்கி ஜென்ரல் இயக்குனர் ஹரி ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாநில தலைவர் பொன்னு தம்பி, பாமக மாநில இளைஞரணி செயலாளர் அண்ணாமலை மற்றும் எல்ஜி நிறுவனத்தின் நிர்வாகிகள் சுதாகர், பிரவீன், பாரதி, கார்த்திக் நந்தனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



