fbpx
Homeபிற செய்திகள்உலக உயர் ரத்த அழுத்தம் நாள்: கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - கண்காட்சி

உலக உயர் ரத்த அழுத்தம் நாள்: கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி – கண்காட்சி

உலக உயர் இரத்த அழுத்தம் நாளை முன்னிட்டு, கோவை ஜிகேஎன்எம் (GKNM) மருத்துவமனையின் iOP வளாகத்தில் மே 18 முதல் மே 20 வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியை மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார். அவருடன் iOP மருத்துவ இயக்குனர் டாக்டர் ராகவேந்திரா அவர்கள், மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுப்பது, அதை கட்டுப்படுத்துவது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக BP பரிசோதனை, உணவுத்துறை ஆலோசனை, பிசியோ தெரபி துறையின் உடற் பயிற்சி ஆலோசனை, கண் சிகிச்சைத் துறை ஆலோ சனை மற்றும் மாற்று மருத்துவத் துறை ஆலோச னைகள் வழங்கப்பட்டன.

முதல் நாள் அன்று, இதயத் துறை, சிறுநீரகத் துறை, பொது மருத்துவத் துறை, நரம்பியல் துறை மற்றும் கண் பரிசோதனைத் துறை மருத்துவர்களால் “உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம்” தொடர்பான கலந்து ரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்துறை மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர். மறுநாள் (மே 19), இதயத் துறை மற்றும் பொது மருத்துவத் துறை மருத்துவர்களின் உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

20ம் தேதி அன்று, மாற்று மருத்துவத் துறையினரால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத் தவும் உதவும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், “உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு சாதாரண நோயாக மட்டும் அல்ல; அது வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒரு நிலை. சரியான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் ஆரோக் கியமாக வாழ்வ தற்கான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஜிகேஎன்எம் மருத்துவ மனை தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச ஆலோசனை முகாம்களை நடத்தி வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img