ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்பில் யானையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வில்லியம் சாட்னர் என்பவர் தனியார் வளர்க்கும் யானைகளை காட்டிற்குள் மீண்டும் கொண்டு விடுவது குறித்த கதையை மையமாக வைத்து “வனத்திற்குள் திரும்பு” (ஸிமீtuக்ஷீஸீ tஷீ tலீமீ திஷீக்ஷீமீst) என்ற பெயரில் குறும்படத்தை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2012 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12ம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நம் பூமியின் இயற்கை சூழல் பாதுகாப்பாக உள் ளதை உணர்த்தும் ஒரு அங்கம் காடுகள். அந்த காடுகள் செழிப்பாக இருப்பதை அங்கு வாழும் யானைகளின் பாதுகாப் பான சூழலை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
“காடு அழிந்தால் நாடு அழியும்“ என்பது காட்டின் சிறப்பை உணர்த்தும் பழமொழி ஆகும்
நாடு முழுவதும் வனங்களில் உள்ள யானை கள் உணவு, தண்ணீர் தேடி தனக்கு சாதகமான இடத்திற்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் தன்மை கொண்டவை. இதனை யானைகள் வலசைபோதல் என்று சொல்வார்கள்.
தென் மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் இந்த இடப்பெயர்ச்சி இருக்கும். இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்படுகின்றன.
காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப் பாதையை இழக்கும் யானைகள், உணவு, தண்ணீருக்காக தவிப்பது மட்டுமின்றி, வேறு கூட்டத்துடன் இணை சேருதலும் பாதிக்கப்பட்டு, பன்முக மரபணு மாற்றம் தடுக்கப்பட்டு, ஆரோக் கியமான யானைக் கூட்டம் உருவாவதும் தடைபடுகிறது.
எதிர்கால சந்ததியினருக்காக இந்த அற்புதமான உயிரினங் களைப் பத்திரமாக விட் டுச் செல்ல வேண்டும் அப்போது தான் இயற்கை சூழல் சீராக அமையும். நமது சுயநலத்துக்காக அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம்.
பழக்கப்பட்ட வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானை கள், ஊருக்குள் வந்து சித்ரவதைக்கு ஆளாவதற் கும் மற்றும் மரணத்தை சந்திப்பதற்கும் காரணம்.
கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு மட் டும் 82 யானைகள் உயிரிழந்துள்ளது , யானைகள் அழுவதை கைகட்டி வேடிக்கை பார்த்தால் நாளை நமக்கான வாழ்வா தாரத்தை இழந்து பெரும் இன்னலுக்கு ஆட்படுவேம்.
இயற்கையின் உயிர்ச் சங்கிலியின் யானைகளின் பங்கு மிகவும் அத்தியாவ சியமானது. அடர்ந்த காடுகளில் தங்களது இடப் பெயர்ச்சியின் மூலம் வழித்தடங்களை ஏற்படுத்தி தருவதே யானைகள்தான்.
யானைகள் ஏற்படுத்தித் தரும் வழித்தடங்களால்தான் இன்ன பிற உயிரினங்கள் இடம்பெயர முடிகிறது. அதன் அடிப்படையில் தான் மற்ற உயிரினங்கள் இனப் பெருக்கம் செய்ய இயல்கிறது.
எனவே யானைகள் அழிந்தால் இதனை அண்டிப்பிழைக்கும் பலநூறு தாவரங்கள், மரங்கள் மற்றும் வன உயிரினங்களை நாம் இழக்க நேரிடும் இதனால் மனிதகுலம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நமது வனங்களும் வன உயிரினங்களும் மதிப்பு மிக்கவை. அவற்றை அறியாது பாதுகாப்போம்!