தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கி டையே வர்த்தக வாய்ப்புகள், தொழில் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தளத்தை உருவாக் கும் நோக்கில் செயல்படும் ‘சேம் பர் ஆஃப் டிரேட் அண்ட் என்டர்பிரைசஸ்’ (கோட்) அமைப்பின் தேசிய அளவிலான தொடக்க விழா கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள கோயம்புத்தூர் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ் வில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், உடுமலை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ஐந்து நகரங்களில் ‘கோட்’ அமைப்பின் புதிய கிளைகள் தொடங்கப்பட்டு, நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அமைப்பின் உறுப்பினர் களுக்கான பிரத்யேக ‘கோட் கனெக்ட்’ எனும் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இச்செயலி மூலம் அரசு சார்ந்த தொழில் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுதல், தொழில் வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்ளு தல், நாடு முழுவதும் கிளைகளை விரிவாக்கம் செய்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்துதல், கூட்டாக மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்தல், தொழில் ஆலோசகர்களை அணு குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு பலன்களை உறுப்பினர்கள் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட் டது.
தொடர்ந்து, திறன் மேம் பாட்டுப் பணிகளுக்காக இணைந்து செயல்படும் ‘இன்டர் நேஷனல் போர்டு ஆஃப் டிரெய் னர்ஸ் அண்ட் கோச்சஸ்’ (ஐ.பி.டி.சி) அமைப்பின் ‘டிரெய்ன் தி டிரெய்னர்’ பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குச் சான் றிதழ்கள் வழங்கப்பட்டன. தொழில் முனைவோருக்குத் தேவையான தொடர் பயிற்சிகளும் ஆலோச னைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கே.ஜி. மருத்து வமனை குழுமங்களின் தலை வர் டாக்டர் பக்தவத்சலம், ராமச்சந்திரா மருத்துவமனை குழுமங்களின் தலைவர் ராம், உதயம் குழுமங்களின் தலைவர் எம்.கே.ஜி. ஆனந்தகுமார், யு.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், அமெரிக்க வாழ் இந்தியர் அருள்நாதன், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர் ராஜசேகர், அடுத்த ஆண்டின் ஆளுநர் வழக்கறிஞர் சூரி நந்தகோபால், ‘ஸ்டார்ட்-அப் டி.என்’ கோவை திட்ட அலுவலர் காயத்ரி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாகப் பங்கேற்றுத் தொழில் வளர்ச்சி, நிதி உதவி மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்துப் பேசினர். விழாவில் ‘கோட்’ அமைப் பின் நிறுவனர் மற்றும் ‘எம்.எம்.பி. குரூப்’ தலைவர் எம்.எம். பிரபு, முதன்மை நிதி அதிகாரி ஆடிட்டர் குமரேஷ் பாபு, முதன்மை ஆலோசகரும் ‘ஆக்சென்சர்’ நிறுவனத்தின் துணைத் தலைவருமான வி.பி. பிரசன்னா, முதன்மை அமைப்பாளரும் ‘கிரேசியா கவுன்சிலிங்’ நிறுவனருமான டாக்டர் ராபர்ட், செயல் இயக்குநர் பிரபு ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
‘கோட்’ அமைப் பின் தேசிய ஒருங்கிணைப் பாளராக தினேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய கிளை இயக்குநர்களாக சிந்தியா பெனடிக்ட், விக்னேஷ், ராஜேஷ், கலைவாணன், சிந்தியா தம்பிதுரை, தமிழ்செல்வன், அங்குராஜ், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பல்வேறு துறை சார்ந்த பொறுப் பாளர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.



