Homeபிற செய்திகள்விமன்ஸ் சென்டர் மதர்ஹூட் மருத்துவமனை சார்பில் மகளிர் தினம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக...

விமன்ஸ் சென்டர் மதர்ஹூட் மருத்துவமனை சார்பில் மகளிர் தினம் – கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக கோவையில் வாக்கத்தான்

கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் நடைபெற்றது. கோவை ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டியுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வு கோவை சாயிபாபா காலனி பாரதி பார்க்கில் இருந்து தொடங்கி மேட்டுப்பாளையம் ரோடு வழியாக விமன்ஸ் சென்டர் மருத்துவமனை வளாகம் சென்றடைந்தது.

இந்த வாக்கத்தானில் 250க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர். முன்னதாக நடை பெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் மிருதுபாஷிணி கோவிந்தராஜன், மருத்துவ இயக்குநர் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மற் றும் அட்வகேட் ஏகேஎஸ் என். சுந்தரவடிவேலு, அடுத்த ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி கோயம்புத்தூர் தலைவர் ரோட்டரி கிருஷ்ணா சாமந்த் கொடியசைத்து தொடங்கி பலூன் பறக்கவிட்டனர்

இந்த வாக்கத்தானின் முக்கிய நோக்கம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் எச்பிவி தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வை ஊக் குவிப்பதும் ஆகும்.

இந்த நிகழ்வு, வழக்கமான சோதனைகள் மற்றும் HPV தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்தது குறிப்பிடதக்கது.

படிக்க வேண்டும்

spot_img