காற்றாலை ஆற்றல் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதன்மையான தொழில்துறை தளமான விண்டர்ஜி இந்தியா நிறுவனம், வரும் அக்டோபர் 4 முதல் 6 வரை சென்னை வர்த்தக மையத்தில், தனது ஆற்றல் மற்றும் லாபகரமான வாய்ப்புகளை வெளிப்படுத்த உள்ளது.
இந்த மாநாடு டொமைனில் உள்ள சமீபத்திய டிரெண்டுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஆராய, தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கும்.
அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (ஓஇஎம்கள்), உதிரிபாக உற்பத்தியாளர்கள், தொழில்துறை உபகரணங்கள், லூப்ரிகண்டுகள், கியர் பாக்ஸ்கள் மற்றும் சுஸ்லான் எனர்ஜி லிமிடெட், என்விஷன் எனர்ஜி, நோர்டெக்ஸ், சானி ரீநியூவபிள் எனர்ஜி, சென்வியோன், ஐநாக்ஸ் விண்ட், எல்எம் விண்ட் பவர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விண்டர்ஜி இந்தியாவின் ஒரு பகுதியாகும்.
மின்சார அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு பிரிவின் மூலம், தமிழ்நாடு வழிகாட்டுதல் பணியகத்தின் முதலீட்டு பார்ட்னர்களாக, விண்டர்ஜி இந்தியா கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற அனைத்து காற்று வளம் கொண்ட மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்கும். இங்கிலாந்து அரசாங்கம் நாட்டின் ஒரு பார்ட்னராக இணைகிறது.
ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா, சுவீடன், நார்வே, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கண்காட்சியாளர்களும் இந்த வர்த்தக கண்காட்சியில் இடம்பெறுவார்கள்.
வர்த்தக கண்காட்சியுடன் “காற்றின் சக்தி 2.0 – இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு ஏற்பாடு செய்யப்படும். இதில் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை, குழு விவாதங்கள் மற்றும் தொழில்நுட்ப விளக்க காட்சிகள் நடைபெறும்.
தமிழ்நாடு வழிகாட்டல் பணியகத்தின் முக்கிய பங்குதாரர்களை உள்ளடக்கிய வட்ட மேசை விவாதங்களையும் நடத்தும். இந்த முக்கிய விவாதங்கள் காற்றாலை ஆற்றல் துறையில் மிக முக்கியமானவர்களிடையே ஒத்துழைப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.