fbpx
Homeபிற செய்திகள்ஜாம்பியா நாட்டில் காப்பர் சுரங்கத்தை மீட்டெடுத்தது வேதாந்தா ரிசோர்ஸ்

ஜாம்பியா நாட்டில் காப்பர் சுரங்கத்தை மீட்டெடுத்தது வேதாந்தா ரிசோர்ஸ்

ஜாம்பியா நாட்டில் உள்ள கொங்கோலா காப்பர் சுரங்கத்தின் உரிமை மற்றும் நிர்வா கத்தை வேதாந்தா ரிசோர் சஸ் நிறுவனம் மீட்டெடுத்துள்ளது.

கொங்கோலா காப்பர் சுரங்கத்தில் 16 மில்லி யன் டன் காப்பர் வளம் உள்ளது. இந்த சுரங்க மானது வேதாந்தா நிறு வனத்தின் முதுகெலும் பாக இருப்பதோடு உலக அளவில் கார்பன் உமிழ்வு இல்லாத ஆற்றல் மாற்றத் தேவையில் முக்கிய பங்கு வகிக்கும்.

வேதாந்தா நிறு வனம் இந்த சுரங்கத்தை மீட்டெடுத்தது குறித்து ஜாம்பியா நாட்டின் சுரங்கம் மற்றும் கனிமவள மேம்பாட்டு அமைச்சர் பால் கபுஸ்வே கூறுகையில், பெரும்பான்மைமிக்க பங்குதாரராக இருக்கும் வேதாந்தா நிறுவனம் இந்த சுரங்கத்தை மீட்டெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிறுவனம் சிறப்பான நடவடிக்கைகளை இங்கு மேற்கொள்ளும் என்றார்.

கொங்கோலா காப்பர் சுரங்கத்தில் 79.4 சதவீத பங்குகளைக் கொண்டு வேதாந்தா நிறுவனம், இதை மீட்டெடுத்திருப்பது இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கி யமான அம்சமாகும்.

காப்பர் தேவையானது ஆண்டுக்கு ஆண்டு சுமார் 25 சதவீதம் அதிகரித்து வருகிறது. காப்பர் வளம் நிறைந்த ஜாம்பியா நாட்டில் உள்ள இந்த சுரங்கத்தில் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி காப்பரை வேதாந்தா நிறுவனம் எடுக்க உள்ளது.

அதுபோன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவில் பயன்படுத்து வதன் மூலம் இங்கும் அதிக அளவிலான காப்பரை மிக ஆழமான பகுதிகளில் இருந்தும் எடுக்க முடியும்.

இந்தியா, தற்போது செறி வூட்டப்பட்ட காப்பரை 90 சதவீதமும், முழுமை அடைந்த காப்பரை 40 சதவீதமும் இறக்குமதி செய்து வருகிறது.
இந்தநிலையில், ஜாம்பியா காப்பர் சுரங்கத் தில் நவீன முறையில் உற் பத்தியை மேற்கொண்டு இந்தியாவின் காப்பர் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை வேதாந்தா நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.

இதுகுறித்து வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால்கூறுகையில், இந்த சுரங்கத்தை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜாம்பியா அரசு எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன்.

கடந்த 2004ம் ஆண்டு முதல் இதனை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் நாங் கள் உறுதியாக இருந்து வந்தோம். இது எங்கள் குழுமத்தின் ஒரு மதிப்புமிக்க சொத்தாகும். எதிர்கால தொழில் நுட்பங்களுக்கு காப்பர் ஒரு முக்கிய கனிமமாக இருக்கும்.

இந்தியாவில் அதிகரித்து வரும் காப்பரின் தேவையை பூர்த்தி செய்வதோடு, ஜாம்பியாவை உலகின் முன்னணி தாமிர உற்பத்தியாளராக மாற்றுவோம். மேலும் ஜாம்பியாவின் நலன்களுக்கு முதலிடம் அளிப்போம்.

அந்நாட்டின் அதிபர் ஹக்கின்டே ஹிச்சிலேமா மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும், அவரது முற்போக்கான தலைமைத்துவத்துக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img