Homeபிற செய்திகள்ஆனைகட்டி: மழையில் வழுக்கி விழுந்து இறந்த காட்டு மாடு

ஆனைகட்டி: மழையில் வழுக்கி விழுந்து இறந்த காட்டு மாடு

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு ஆனைகட்டி மத்திய சுற்று துமனூர் சரக பகுதியில் காட்டு மாடு ஒன்று அகழியில் விழுந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து வனச் சரக அலுவலர் தலைமையில் ஒரு குழு விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, காட்டு மாடானது மழையின் காரணமாக வழுக்கி விழுந்து இறந்த நிலையில் காணப்பட்டது.

மேலும் வன கால்நடை அலுவலர் தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர், வன கால்நடை அலுவலர், கோவை வனச் சரக அலுவலர், துடியலூர் பிரிவு வனவர் கோவை வனச் சரக பணியாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பு உறுப்பினர் ஆகியோரது முன்னிலையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் காட்டு மாடானது பலத்த மழையின் காரணமாக அகழியில் தவறி விழுந்ததில் இருதயம் மற்றும் நுரையீரல் அழுத்தம் ஏற்பட்டு இருந்து உள்ளது என்பது கண்டறியப்பட்டது. இறந்த காட்டு மாட்டின் வயது 10&-12 வரை இருக்கக் கூடும். உடற்கூறு ஆய்வுக்கு பின் மாட்டின் உடலை வனத் துறையினர் குழி தோண்டி புதைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img