தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 5வது மாநில இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகள் மே 18, 19 தேதிகளில் நடைபெற்றது.
இதில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவி பி.இலக்கியா தடகளப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதலில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.