Homeபிற செய்திகள்சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது

சேலத்தில் 550 கிலோ வெள்ளி கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியில் உள்ள வெள்ளிப் பட்டறையில் கடந்த 12-ம் தேதி 550 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


பல மாவட்டங்களில் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தஞ்சாவூரில் கொள்ளைக்குப் பயன்படுத்திய காரை மடக்கிப் பிடித்தனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 323 கிலோ வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
செயலி மூலம் தொடர்புகொண்டு திட்டமிட்டு, வெள்ளிப் பொருட்களை மூன்றாகப் பிரித்துக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாக காவல் ஆணையர் பாபு தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img