காரைக்குடி அருகே விசாலையன் கோட்டை யில் உள்ள கலாம் கலி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8-ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் முனைவர் சேது குமணன், முதல்வர் முனைவர் க.கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்கள் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலின், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியின் (பொ) முதல்வர் முனைவர் கே.முரளிராஜன், காவல் ஆய்வாளர் ஏ. சதீஷ் குமார் ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தனர்.
கல்லூரியின் குதிரை யேற்ற பயிற்சியாளர் ஜி.வினய் தேசியக் கொடியை ஏந்தியபடி குதிரையில் வலம் வந்தார். தேசிய மாணவர் படையின் அணி வகுப்பு நடந்தது. ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி மாணவர்கள் மைதா னத்தை சுற்றி வந்தனர்.
கல்லூரி உதவி உடற் கல்வி இயக்குநர் சு.சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவர்களின் தன்னம்பிக்கையை தூண்டும் வகையில் விளையாட்டு துறையில் சாதித்த பல்வேறு சாதனை யாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை சிறப்பு விருந்தினர்கள் பகிர்ந்தனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி தாளாளர், முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.



