fbpx
Homeபிற செய்திகள்முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் படைவீரரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் படைவீரரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் திறன் (ம) தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் 78-வது சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்ட “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் 30 விழுக்காடு மூலதன மானியம், 03 விழுக்காடு வட்டி மானியம் வழங்கிடவும் இவர்களுக்கு திறன் (ம) தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இத்திட்டத்தினை செயல்படுத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 6 பேர் கொண்ட மாவட்ட செயல்திட்டக்குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் இம்மாவட்டத்தில் விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களில், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட் டவர்களில், 26 நபர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு அவர்களுக்கு திறன் (ம) தொழில் முனைவோர் மேம்பாட்டுப்பயிற்சி மையம் சார்பாக 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து சான்று பெற்ற இரண்டு முன்னாள் படைவீரர் மனைவிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.

மேலும் “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img