fbpx
Homeபிற செய்திகள்ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நிறுவனர் மறைந்த ராஜா முத்தையா செட்டியார் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா மலை நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணாமலை நகரில் நடைபெற்றது.

இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடவியல் துறை தலைவர் மணிக்குமாரி தலைமை தாங்கினார். தென்றல் மணி இளமுருகு முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஞானகுமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உசுப்பூர் ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவியாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் அண்ணாமலை பல்கலைக் கழக கட்டிடவியல் துறைக்கு கணினி உபகரணங்கள் மற்றும் கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மருந்துகளும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மக்கும் குப்பை, மக்கா தகுப்பை குறித்து பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img