fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் மணமாலை நிகழ்ச்சி

தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் மணமாலை நிகழ்ச்சி

திருப்பூரில் தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஜெயக்குமார், தர்ம புண்ணியம் தலைமையில்  மணமாலை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், தேசிய செட்டியார்கள் பேரவை ஜெகநாத் மிஸ்ரா, தொழிலதிபர் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட வரங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தங்கள் மகன், மகளுக்கு இது போன்ற மணமகன் மணமகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இதில் 600க்கும் மேற்பட்ட பதிவு செய்து அதில் 100 பொருத்தம் பார்க்கப்பட்டது.   இந்த மணமாலை மூலம் அனைவரும் இலவசமாக ஜாதகங்களை பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டிய வரன்களை அவர்களே தேடிக் கொள்ளலாம் எனவும் இந்த மணமாலை நிகழ்ச்சி சமுதாய ஒற்றுமைக்காக நடத்தப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img