உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2023 (ஜிஎம்ஐஎஸ்) தொடர்பான சாலைக்காட்சியை மத்திய அரசு துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துகள் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோ வால் தொடங்கி வைத் தார்.
மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது:
மாற்றுப் போக்குவரத்தாக, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து உருவாகி வருகிறது. குறிப்பாக, இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் சாத்தியப் பட்டுள்ளது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு முக் கிய சக்தியாக விளங்குகிறது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2014 தொடங்கி இதுவரை ரூ 5200 கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகள் துறை மிகப் பெரிய ஊக்கத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக முதலீடு செய்யப்பட்ட தொகை யுடன் ஒப்பிடும்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு செய்த முதலீட்டின் தொகை 200% அதிகமாகும். மோடி அரசின் கீழ் அதிக முக்கியத்துவம் பெறும் துறையாக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
தெற்கு ஆசியப் பிராந்தி யத்திலுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கும்.
இந்தியாவிலுள்ள துறைமுகங் களை நவீனப்படுத்துவதன் மூலம், கடலோரச் சமூகங்கள், கடலோர மாவட்டங்கள் மற் றும் ஒட்டு மொத்த நாட்டின் மேம்பாட்டையும் இந்தியா உறுதிப்படுத்தும்.
இந்தியத் துறை முகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்துவதன் மூலம், துறைமுகம் சார்ந்த பொருளாதாரம் வளர் வதால், தொழில்மயமாக்கல், தயாரிப்பு மற்றும் வணிகத்தை எளிமையாக்குதலும் சாத்தியப்படும் என்றார்.
துறைமுகங்கள் கப்பல் நீர்வழிப் போக்குவரத்துகள் அமைச்சகச் செயலர் டி கே இராமச்சந்திரன் பேசும்போது, வட கிழக்குப் பிராந்தியத்தில் தொலை தொடர்பை விரிவுபடுத்த 20 திட்டங்களை அடையாளம் கண்டுள்ளோம்.
ஏற்கனவே உள்ள முனையங்களை நவீனப்படுத்துதல், புதிய முனையங்களை உருவாக் குதல், முதல் மற்றும் கடைசி இணைப்பை மேம்படுத்துதல், தொழில்மயமாக்குதல், ஆற்றுத் துறைமுகங்களை கட்டுதல், திறன் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முனைவுகளை மேற்கொண்டு வருகிறோம்.
கிழக்கு நீர்வழிப் போக்குவரத்துகள் மியான்மர், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்காசியப் பிராந் தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் புத்துயிர் அளிக்கும் வகை யில் அமைக்கப்படும் என்றார்.
இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகள் ஆணைக்குழுத் தலைவர் சஞ்சய் பந்தோபாத்யாய் கூறுகையில் ‘நிதியாண்டு 2023-ல் தேசிய நீர்வழிச் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டது.
உலகளாவிய வர்த்தகம் பின்னடைவைச் சந்தித்த ஆண்டில், நமது தேசிய நீர்வழி மூலம் சரக்கு போக்குவரத்து பெற்ற அபரிமித வளர்ச்சியானது, நமது முனைவுகளின் செயல்திறன் மற்றும் இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து அமைப்பின் வலிமைக்குச் சிறந்த சான் றாகும் என்றார்.