fbpx
Homeபிற செய்திகள்‘நிகழ்காலத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்’ லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் அறிவுரை

‘நிகழ்காலத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும்’ லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் அறிவுரை

எஸ்எஸ்விஎம் (SSVM) இன்ஸ்டிடியூஷன்ஸ் கோவை, எஸ்எஸ்விஎம் வேர்ல்ட் ஸ்கூலில் உருமாறும் இந்தியா மா நாடு (Transforming India Conclave 2023)-ன் இரண் டாவது பதிப்பை துவக்கி வைத்தது.

‘உங்களுக்குள் இருக்கும் சக்தியை கட்டவிழ்த்து விடுங்கள்’ என்பதே இம்மாநாட்டின் தலைப்பாகும். மாநாட்டை துவக்கி வைத்து ஜெனரல் ஆபிசர்–கமாண்டிங்-இன்-சீப், சதர்ன் கமாண்ட் லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங், பேசும்போது, இந்தியா தற்போது மாற்றத்தின் உச்சியில் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இதுவரை அடைந்த வளர்ச்சியை புள்ளியில் வாரியாக எடுத்துக் கூறினார். நிலவின் மேற்பரப்பில் லேண்டர் கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

தற்போது, இந்தியா தன் கவனத்தை சூரியன் மீது திருப்பியுள்ளது.
இந்தியா மாற்றம் அடைவதற்கு மக்கள் ஒவ்வொருவரும் மாற்றம் அடையவேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஆன்மீக பாரம்பரியம் மற்றும் ஆன்மீக கருத்துகள் வழிகாட்டுதலாக அமைந்துள்ளன.

மாணவர்கள் நிகழ்காலத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். வாழ்க்கை என்பது நிகழ்காலம் தான். கடந்த காலத்தை பற்றி நினைப்பது வருத்தத்தை அளிக்கும். எதிர்காலத்தைப் பற்றி நினைப்பது பதட்டத்தை உருவாக்கும் என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி பேசும்போது இந்தியா சேவைத் துறையில் மிளி ர்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், இந்தியா உலக நாடு களுக்கு சேவைகளை ஏற்றுமதி செய்ய முடியும். நம் ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகையில் (உலகில் அதிக அளவு இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா) ஆகியன நமக்கு ஆதரவாக இருக்கின்றன என்றார்.

கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்விச் சீர்தி ருத்தவாதி, லடாக் செமன் மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்தின் நிறுவனர் இயக்குநர் சோனம் வாங்சுக் பேசியதாவது: துன்பங்கள் சவால்களை ஏற்படுத்துகின்றன.

ஆனால், வாய்ப்புகளை அளிக்கின்றன. இயற்கையை பாதுகாப் பதின் மூலம், புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படுத் தும் தாக்கங்களை குறைக்க முடியும். ஆர்வம், பச்சாதாபம், முன்முயற்சி ஆகிய மூன்றும் தனி மனிதன் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கான முக்கியமான மூன்று தூண்களாகும் என்றார்.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன் வரவேற்றார். எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் செயலா ளர் மோகன்தாஸ், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் கல்வி இயக்குநர் ஸ்ரீஷா உள் ளிட்டோர் பங்கேற்றனர்

படிக்க வேண்டும்

spot_img