மாமல்லபுரத்தில் டபிள்யூ வி.கனெக்ட் சார்பில் 101 மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, வருமான வரி த்துறை ஆணையர் நந்தகுமார், முன்னாள் சுகா தாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, டபிள்யூ. வி.கனெக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தட்சிணாமூர்த்தி, இயக்குநர் நந்தினி விஜய் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்ல புரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய 101 மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டது. இதற் காக ரூ.1 கோடி வரை செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சீர்வரிசை
இந்த 101 புதுமண தம்பதிகளுக்கும், தாலி, பட்டுப்புடவை, வேட்டி சட்டை, 1 மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், படுக்கை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.
பொருளாதாரத்தை தாண்டி ஒவ்வொருவரின் திருமண கனவையும் நிறை வேற்றவும், திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நி கழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டதாக டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ பவுண்டேஷன் மற்றும் மதர் எர்த் பவுண்டேஷன் ஆகியற்றுடன் இணைந்து இந்த மணமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என டபிள்யூ.வி. கனெக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.



