இந்திய வகையினத்தில் சிறப்பான மற்றும் உயர் திறன் (HP) கொண்ட மூன்று டிராக்டர்கள் அறிமுகம் செய்யப்படு வதை விஎஸ்டி ஸெட்டார் பிரைவேட் லிமிடெட் இங்கு பெருமகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.
இந்நிறுவனம், விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் மற்றும் ஹெச்டிசி இன்வெஸ்ட் மெண்ட்ஸ் a.s ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு வகிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.
இந்த டிராக்டர்களின் அறிமுகத்தை பெங்களூரில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்வில் விஎஸ்டி ஸெட்டார்-ன் நிர்வாக இயக்குநர் ஆண்டனி செருக்காரா மற்றும் அதன் துணைத்தலைவர் பிலிப் சோகா ஆகியோர் ஒருங்கிணைந்து அறிவித்தனர்.
VST ZETOR 4211, VST ZETOR 4511, மற்றும் VST ZETOR 5011 ஆகியவை 41 முதல் 50 HP திறனளவு பிரிவிற்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று புதிய டிராக்டர்கள் ஆகும்.
நிலத்தை உழுது தயார் செய்வதிலிருந்து அறுவடைக்கு பிந்தைய செயல்பாடுகள் வரை பல் வேறு வகையான உப யோகங்களுக்கு விஎஸ்டி ஸெட்டார் டிராக்டர்கள் மிகப்பொருத்தமானவை ஆகும்.



