fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு கொங்குகலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டுவிழா கைப்பந்து வீரர் பங்கேற்பு

ஈரோடு கொங்குகலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டுவிழா கைப்பந்து வீரர் பங்கேற்பு

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 31- வது விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளையின் துணைத்தலைவர் ஈ.ஆர்.கே.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் உடலளவிலும் மனதளவிலும் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் மற்றும் கொங்கு நேஷ்னல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக இந்திய கைப்பந்து அணியின் வீரர் ஆர்.ராஜ்குமார் கலந்து கொண்டு பேசுகையில், விளையாட்டுத் துறை மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஒழுக்கமும் மிகவும் அவசியமென்றும் வாழ்வில் கடினப்படும் எந்தமுயற்சிக்கும் வெற்றி நிச்சயம் உண்டு என்ற கருத்தினை தனது அனுபங்களின் வாயிலாக எடுத்துரைத்து மாணவ, மாணவிககளை ஊக்கப்படுத்தினார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்புரைவழங்கினார். மேலும் கல்லூரின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கே.எம்.பிரகாஷ்ராஜ், 2024&-2025 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறையின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

மேலும் கல்லூரி, மாவட்டம், மண்டலம், பல்கலைக்கழகம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடையங்களையும் சிறப்பு விருந்தினர் உள்ளிட்டோர் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியின் நிறைவாக வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் கே.பி.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img