திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகளின் இளங்கலை முதலாம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார்.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர்கள் டாக்டர் பேபி ஷகிலா, டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.
இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் இப்போது 2024- 2025 ம் கல்வியாண்டில் கல்லூரி வாழ்வில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்றனர்.
மேலும் கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற முன்னாள் மாணவிகள் தற்போது பல துறைகளில் தொழில் முனைவோர்களாக வெற்றி பெற்று சாதனைப் படைத்த செல்வி சுஜிதா ,சங்கமித்ரா, ரஸ்பனாபேகம் ஆகியோர் கல்லூரியில் தாங்கள் பெற்ற சாதனைகள் பற்றியும் அவர்களின் கல்லூரி அனுபவங்களையும் முதலாமாண்டு மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலாமாண்டு மாணவிகள் சுமார் 3000 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் .
மேலும் இந்த விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், தேவராஜ், திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வெ. குமரவேல், துணை முதல்வர் டாக்டர் மேனகா, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் பத்மநாபன் மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் சிவபாலன் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் த.ஸ்ரீதர்ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.