fbpx
Homeபிற செய்திகள்விஐடி பல்கலை - ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஐடி பல்கலை – ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேலூர் விஐடி பல் கலைக்கழகத்துக்கும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடந்த விழாவில், விஐடி சுகாதார அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி தலைவர் கீதா மணிவாசகம் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு வரவேற்றார்.
ஸ்ரீ நாராயணி கல்விக் குழு மங்களின் இயக்குனர் மற்றும் அறங்காவலர் டாக் டர் பாலாஜி சிறப்புரை வழங்கினர்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தனது உரையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விஐடி பேராசிரியர்கள் மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் மருத் துவர் குழு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் இணைந்து செயல்பட்டு, அதனை எதிர்கால மாணவ, மாண வியருக்கு பயனுள்ளதாக மாற்றி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், விஐடி இளங் கலை மற்றும் முதுநிலை ஆய்வு மாணவர்களுக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் மருத்துவ பயிற்சி, திட்ட வாய்ப்பு கள், மாணவர் பரிமாற்றம், தொழில்முறை பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் சந்தியா பெண் டாரெட்டி, இணை துணை வேந்தர் பார்த்த ஷாரதி மல்லிக், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மைய இணை இயக்குனர் டாக்டர் ராம்பிரசாத் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img