விருதுநகர் மற்றும் சாத்தூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மற்றும் சாத்தூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமை தாங்கினார்.
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனி வாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆ.ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுலாத்துறை அமைச் சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு துறையையும் மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தங்கும் விடுதிகளை மேம்படுத்துவது குறித்து தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மற்றும் சாத்தூரில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முன்னணி இடத்தில் உள்ளது. தமிழகத்தில் புராதன கோயில்கள் உள் ளதால் வெளிநாட்டு சுற் றுலா பயணிகளின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு சுமார் 100 கோடி ஒதுக்கி உள்ளது. கைவிடப்பட்ட 13 தமிழ்நாடு உணவகங்களை மறுசீரமைக்க ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
சாத்தியக்கூறுகள் உள்ள சுற்றுலாத்தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய படகு சவாரிகளை உருவாக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சுற்றுலா துறையின் கீழ் உள்ள கைவிடப்பட்ட 300 இடங்களை மேம்படுத்த புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் நகர் மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.