fbpx
Homeபிற செய்திகள்‘வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட செயல்பாடுகள்: விருதுநகர் ஆட்சியர் ஆய்வு

‘வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட செயல்பாடுகள்: விருதுநகர் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட் டுவோம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, இத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து கலந் துரையாடினார் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்.

விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ் வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக் கூடம் செயல்பட்டு வருவதையும், சுய தொழில் மூலம் மகளிர் தையலகம் நடத்தி வரும் வருவதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பின்னர், சுய உதவிக்குழுக்கள் செயல் படும் முறைகள், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

மெட்டுக்குண்டு கிராமத்தில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள 19 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 4 முதியோர் சுய உதவிக்குழுக்கள் என 23 குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன், குழுக்களின் செயல்பாடுகள், வழங்கப்படும் கடனுதவிகள், வட்டி விகிதம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

வழிமுறைகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் முக்கியத்துவம், கடனுதவிகள், மானிய, பயிற்சிகள், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.50,000- மற்றும் 1 பயனாளிக்கு உணவகம் தொழில் புரிவதற்காக ரூ.50,000- என மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

ஆய்வின் போது, தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள், அலுவலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img