fbpx
Homeபிற செய்திகள்நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று, தன்னாட்சி அங்கீகாரம்

நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று, தன்னாட்சி அங்கீகாரம்

கோவை- பாலக்காடு சாலையில் காளியாபுரத்தில் அமைந்துள்ள நேரு இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று மற்றும் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப் பட்டது. இக்கல்லூரி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது.

சமீபத்தில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அமைப்பால் இக்கல்லூரி கி+ தரச் சான்றை முதல் சுற்றிலேயே பெற்று, சிறப்பிடம் பெற்றுள்ளது.
மாணவர்களின் கற்றல், மேம்பாடு, கற்பித்தல், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி துறை, வேலைவாய்ப்பு, தொழில் முனை வோர் ஆவதற்கான வழிகாட்டல் போன்ற அனைத்து விதத்திலும் மாணவ மாணவியர்களின் நலம் சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நேரு கல்விக் குழுமத்தின் தலை வர் முனைவர் அட்வகேட் பி. கிருஷ்ணதாஸ், செயலாளர் முனைவர் பி. கிருஷ்ணகுமார் ஆகியோரின் வழிகாட்டு தலின்படி நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பல்கலைக்கழகம் மானிய குழு பரிந்துரைகளின் படி 2023& – 2024ம் கல்வி ஆண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளது.

கல்லூரி செயலர் முனைவர் பி கிருஷ்ணகுமார் கூறுகையில், கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர் சிவராஜா, ஆசிரிய பெருமக்கள், பணியாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் ஆகியோரின் கடின உழைப்பும், உறுதியான நம்பிக்கையும், தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றார்.

அனைவரது வாழ்த்துகளினாலும், கூட்டு முயற்சிகளாலும் இந்த கல்லூரி மாணவர் சமுதாயத்திற்கும் இந்திய பெரும் நாட்டிற்கும் தேவையான பொறியாளர்களை மிகுந்த ஒழுக்கத் துடனும், தொழில்நுட்ப அறிவு திறனோடும் உருவாக்கும் என்ற உறுதியை ஏற் படுத்தி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img