ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் (ஸ்கூபா டைவிங்) மூலம் கடலுக்கடியில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்த தேர்தல் விழிப்புணர்வு குறும்பட வீடியோவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி வெளியிட்டார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் (ஸ்கூபா டைவிங்) மூலம் கடலுக்கடியில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்த தேர்தல் விழிப்புணர்வு குறும்பட வீடியோவினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி நேற்று வெளியிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடை பெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைந்திடும் வகையில், வாக்களிப் பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் முதல்தலைமுறை வாக்காளர்களிடம் பல்வேறு துறைகளின் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர் நிகழ்வாக, இன்றைய தினம், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் (ஸ்கூபா டைவிங்) மூலம் கடலுக்கடியில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்த தேர்தல் விழிப்பணர்வு குறும்பட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத் தில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தினை வலியுறுத்தி, 100 சதவீதம் நோக்கி என்ற விழிப்புணர்வு தேர்தல் இலச்சினையை வெளியிடப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், 100 சதவீதம் நோக்கி விழுப்புரம் என்ற அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப் புரம் மாவட்டமானது கடல் சார் மாவட்டம் என்பதால் ஆழ்கடல்நீர்மூழ்கி வீரர்கள்(ஸ்கூபாடைவிங்) மூலம், முதல்தலைமுறை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலுக்கடியில் வாக்குப்பதிவு செய்வது போன்ற விழிப்புணர்வு வீடியோவுடன், மாவட் டத்தில் இதுவரை பல் வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை வீடியோக்களை குறும்பட மாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 78 சதவீதம் வரை வாக்குப்பதிவு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் தற்பொழுது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைந்திடும் வகையில்அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றிடும் வகையில் தங்கள் வாக்கினை தவறாமல் செலுத்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷுநிகம், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பெ. சதீஷ் உட்படதுறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



