புதுடில்லி சிஎஸ்ஐஆர் பொது இயக்குநர் என்.கலைச்செல்வி
2034 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
கலசலிங்கம் பல்கலையில் 36வது பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தா் முனைவா் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. பல்கலை இணை வேந்தா் டாக்டா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் முனைவர் சசிஆனந்த், அர்ஜூன், கலசலிங்கம் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டாக்டா்.சுவாமிநாதன் ஆலோசகர், ஞானசேகர், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர், முனைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுடில்லி, சி.எஸ்.ஐ.ஆர் பொது இயக்குநர் கலைச்செல்வி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு பதக்கங்களையும், பொறியியல் வேளாண்மை, கட்டிடக்கலை, கலை மற்றும் அறிவியல் இளங்கலை, முதுகலை மாணவர்கள், வாய் பேசாத, காது கேளாத மாணவர்கள் 10 போ் , பி.ஹெச்.டி 70 பேர் உள்பட மொத்தம் 2034 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
“பட்டம் பெற்ற மாணவர்கள் வேலைக்கு செல்வதை விட தொழில் முனைவோராக வர வேண்டும்” என்றார்.