fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பலோடையில் அரசு தொழில் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி மைய முதல்வர் செல்லக்கனி தலைமை வைத்தார்.

வேப்பலோடை பஞ்சாயத்து தலைவர் வேல்கனி மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி ஒன்றிய கவுன்சிலர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு 84 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img