கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 968 பேர் பட்டம் பெற்றனர்.
கேபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் மும்பையில் உள்ள ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் யு.காமாட்சி முடாளி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் தேவி பிரியா ஆண்டறிக்கையை வாசித்தார்.
பட்டமளித்து பேசிய காமாட்சி முடாளி இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, பல துறைகளில் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதால் திறமையான மனி தவளத்துடன் உலகளாவிய மையமாக உருவெடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, திறமையான நிபுணர்களுக்கான தேவை உயர்ந்து வருவதுடன், ஸ்கில் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் இதற்கு ஆதரவாக உள்ளன என்றும் கூறினார்.
மாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இலட்சியத்துடன் கூடிய உயர்வான நோக்கங்களை கடைப்பிடித்து, புதுமை, தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் தேசிய சவால்களை எதிர்கொள்ளும் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.
எட்டு துறைகளிலிருந்து 935 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், நான்கு துறைகளிலிருந்து 33 மாணவர்களுக்கு முதுநிலை பட்டமும் இவ்விழாவில் வழங்கப்பட்டது. கல்லூரி அளவில் முதுநிலை துறைகளில் முதலிடம் பிடித்த கட்டமைப்புப் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவி ஷானியா மற்றும் இளநிலை துறைகளில் முதலிடம் பிடித்த வேதிப் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவி உமாமகேஸ்வரி ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு துறையிலும் தரவரிசையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூ ரியின் சார்பில் பாராட்டுப் பத்திரமும், பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பட்டம் பெற்ற அனைவரையும் செயலா ளர் காயத்ரி மற்றும் கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.



