fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: கோவை தெற்கு - செந்தில்பாலாஜி, கோவை வடக்கு...

கோவை மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்: கோவை தெற்கு – செந்தில்பாலாஜி, கோவை வடக்கு – துரை செந்தமிழ் செல்வன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

70 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகிறது.

கோவை மாவட்டத்தில் தொகுதி வாரியாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமாறு:

கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலஜி போட்டியிடுகிறார்.

இதேபோல திமுக வேட்பாளர்களாக கோவை வடக்கு தொகுதியில் மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், சூலூர் தொகுதியில் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு தொகுதியில் சபரி கார்த்திகேயன், வால்பாறை தொகுதியில் சுதாகரும் மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரமும் தொண்டாமுத்தூர் தொகுதியில் N.R.கார்த்திகேயனும் போட்டியிடுகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் காங்கிரசுக்கும் பொள்ளாச்சி தொகுதி கொமதேகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img