fbpx
Homeபிற செய்திகள்அறுவை சிகிச்சை இல்லாமலே உடல் பருமனை குறைக்க முடியும்- கோவை விஜிஎம் மருத்துவமனை தகவல்

அறுவை சிகிச்சை இல்லாமலே உடல் பருமனை குறைக்க முடியும்- கோவை விஜிஎம் மருத்துவமனை தகவல்

அறுவை சிகிச்சை இல் லாமலே உடல் பருமனை குறைக்க முடியும் என்று விஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவையின் வயிற்று மற்றும் கல்லீரல் நிபுணரான டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத்துக்கு, அமெரிக்கன் காலேஜ் ஆப் காஸ்ட் ரோஎன்டேரோலஜி இயக்கத்தின் 2021 க்கான சமூக சேவை விருது வழங்கப்பட்டது.

உலகளாவிய எசிஜி என்னும் இந்த இயக்கத்தில் 11,000-க்கும் மேற்பட்ட வயிற்று நிபுணர்கள் உள்ளனர். எசிஜியின் ஆளுநராக டாக்டர் பிரசாத் ஐயர் இந்த விருதை டாக்டர் விஜிஎம் இடம் வழங்குவார்.

இந்த விருது சமூக சேவையில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் மருத்துவருக்கு ஆண்டிற்கொருமுறை வழங்கப்படுகிறது.


விஜிஎம் சிறப்பு மையம்

இதுவரையில் உடல் பருமனை குறைப்பதற்கு வயிற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது . இப் போது அதிநவீன முறையில், எண்டோஸ்கோப் மூலமாகவே வயிற்றின் உள்ளிருந்து அறுவை சிகிச்சை போலவே தைத்து வயிற்றின் அளவைக் குறைக்க முடியும். வயிற்றில் எண்டோ பலூன் வைத்து சில மாதங்களில் 15% உடல் எடையை குறைக்க முடியும்.

வி.ஜி.எம். மருத்துவமனையில் 4 மாதங்களுக்கு முன்பு, உடல்பருமன் இருக்கும் 18 வயது சிறுமிக்கு என்டோஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரோபிளாஸ்டி செய்து, 15 கிலோ எடையை இரண்டு மாதங்களில் குறைக்க முடிந்தது.

உடல் எடையை குறைக்க வேண்டிய மற்றவர்களுக்கு இந்த நன்மையை விரிவு படுத்த, உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கு ஒரு சிறப்பான அணுகுமுறையைச் செய்யும் சிறப்பு மையத்தை திறந்து வைக்கிறோம்

இப்போது, உடல் பருமன் பலூன் மாத்திரை போல விழுங்கலாம் உடல் பருமன் பலூன் ஒரு காப்ஸ்யூல் அல்லது மாத்திரையை விழுங்குவது போல விழுங்கலாம்.
அது வயிற்றில் தன்னிச்சையாக விரிவடையும்.

4 மாதங்கள் முதல் 6 மாதங்களில் நோயாளி 10 முதல் 12 கிலோகிராம் வரை எடையைக் குறைக்கலாம். பலூனை அறிமுகப்படுத்த எண் டோஸ்கோபி தேவையில்லை.

இந்த நடைமுறைகள் அனைத்தும் வரும் 18-ம் தேதி நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் சர்வதேச மற்றும் தேசிய ஆசிரியர்களால் நிரூபிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img