fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கனரக வாகன கண்காட்சி: நாளை நிறைவு

கோவையில் கனரக வாகன கண்காட்சி: நாளை நிறைவு

கோவை கொடிசியா அரங்கில் லாரி மற்றும் டிரக்,டயர் உள்ளிட்ட கனரக வாகன கண்காட்சி நேற்று (டிச.16) தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இக்கண்காட்சி நாளை நிறைவடைகிறது.

கண்காட்சியை போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தன்ராஜ் செல்லப்பன், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் அரவிந்த் அப்பாஜி, நிதி கமிட்டித் தலைவர் சுபம் சுந்தரராஜன், சிம்டா பொருளாளர் என்.பி. வேலு, கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கண்காட்சியில் டிரக்குகள், ட்ரெய்லர்கள், டிம்பர்கள், டேங்கர்கள், கண்டெய்னர்கள், டயர்கள் மற்றும் ஒரிஜினல் உதிரிப் பாகங்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இல வசம்.

படிக்க வேண்டும்

spot_img