fbpx
Homeபிற செய்திகள்இளம் மருத்துவர்கள் நோயாளிகளிடம் கனிவுகாட்ட நறுவீ மருத்துவமனை தலைவர் அறிவுரை

இளம் மருத்துவர்கள் நோயாளிகளிடம் கனிவுகாட்ட நறுவீ மருத்துவமனை தலைவர் அறிவுரை

இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளையின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு மற்றும் பொங்கல் விழா மருத்துவ சங்க அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை தலைவர் டாக்டர் கே. வெங்கட்ரமணன் வரவேற்றார்.

சங்க செயலாளர் டாக்டர் எம். ஜெகதீசன் சங்கத்தின் ஆண்டறிக்கை வாசிக்க சங்க பொருளாளர் டாக்டர் சி. சுபாஷினி சங்க நிதி நிலை பற்றி விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளையின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் கே. சதீஷ்குமார், செயலாளர் டாக்டர் எம். ஜெகதீசன், நிதி செயலாளர் டாக்டர் எஸ்.பி. வசந்தராஜ், துணைத் தலைவர் டாக்டர் எம்.தானேஷ் குமார் ஆகியோருக்கு சங்கத்தின் வடக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் டி. பூபதி ஜான் பதவி பிரமாணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்வில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் கௌரவ விருந்தினராக பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசுகையில், “உலகில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தலை சிறந்த மருத்துவர்கள் இந்தியர்களாக இருப்பது பெருமைப்படதக்கது.

இன்றளவில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சி மற் ம் சிறந்த மருத்துவ சேவை அளிப்பதின் காரணமாக இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு மருத்துவ துறையில் முதலிடம் பெற் றிருப்பது பெருமைக்குறியது.

இன்றைய இளம் மருத்துவர்கள் தங்களை நாடி வரும் நோயாளிகளின் நோய் தன்மை மற்றும் அறிகுறிகளை பொறுமை யாக கேட்டு தக்க சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

முன்னதாக மருத்துவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நிகழ்வில் பொங்கலி டுதல், உறியடி, கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்வில் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர்கள் டாக்டர் சடகோபன், டாக்டர் தாமோதரன் மற்றும் டாக்டர் மதன் மோகன், டாக்டர் அருளாளன், டாக்டர் முரளி, டாக்டர் சேந்தன், டாக்டர் அருள் பாரி உள்ளிட்ட பல மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். முடிவில் சங்க நிதி செயலாளர் டாக்டர் எஸ்.பி.வசந்தராஜ் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img