fbpx
Homeபிற செய்திகள்2050ல் இந்தியாவில் 50 சதவீதம் பேர் கண் கண்ணாடி அணிந்திருப்பார்கள் வாசன் மருத்துவமனை மருத்துவ இயக்குனர்...

2050ல் இந்தியாவில் 50 சதவீதம் பேர் கண் கண்ணாடி அணிந்திருப்பார்கள் வாசன் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் தகவல்

இந்தியாவில் வரும் 2050ல் 50 சதவீத மக்கள் கண் கண்ணாடி அணிந்திருப்பர் என்று வாசன் கண் மருத்துவமனை தமிழ்நாடு மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் கமல் பாபு தெரிவித்தார். ஈரோட்டில் புதுப்பிக்கப்பட்ட வாசன் கண் மருத்துவமனையை வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கமல்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது சிறு குழந்தைகள் உட்பட பலரும் செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர். தொடர்ந்து செல்போன் பார்ப்பது கண்கள் மற்றும் நரம்புகளை பாதிக்கும். எனவே ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் செல்போன்களை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கலாம். தொடர்ந்து பார்க்க அனுமதிக்க கூடாது. செல்போன் அத்தியாவசியமானது. எனவே அதை தவிர்க்க முடியாது. தற்பொழுது குழந்தைகளுக்கு கூட கண்புரை வருகிறது. இது நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மரபியல் மாற்றம் உணவு பழக்கம் போன்றவைகளால் ஏற்படுகிறது.

குளூக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்த நோய் நூற்றில் ஐந்து பேருக்கு வருகிறது. இதற்கான அடையாளம் முதலில் தெரியாது. இதேபோன்று சிலருக்கு கேடராக்ட் குறித்து கூட முன்கூட்டி தெரியாது. இரவில் விளக்கு வெளிச்சத்தால் கண் கூச்சம் ஏற்படும். அல்லது பார்வையில் சில சமயங்களில் பக்கவாட்டில் உள்ள பொருள்கள் மங்கலாக தெரியும். எனவே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கேட்டரக்ட் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

எனவே சர்க்கரை வியாதி இருக்கிறதா என முதலில் சோதனை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும். தற்போது அதிநவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. ஒரே சமயத்தில் இரண்டு கண்களுக்கும் கேட்டரக்ட் அறுவை சிகிச்சை செய்ய வசதி உள்ளது. தற்போது லென்ஸ் பொருத்தப்படுகிறது. கண்களில் ப்ரோட்டின் சத்து குறைந்தால் அதை ஊசி மூலம் நிவர்த்தி செய்து கண் குறைபாட்டை சரி செய்யும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. வாசன் மருத்துவமனைக்கு இந்தியாவில் 83 மையங்கள் உள்ளன. விரைவில் ஈரோடு மையத்தில் கண் வங்கி ஏற்படுத்த அரசிடம் விண்ணப்பித்துள்ளோம். அதன்பிறகு கண் மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img