கோவை அரசூர் கே.பி.ஆர். கல்லூரியில் கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் விருது (KPR LEGACY AWARD) வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் புத்தா சந்திரசேகர் (சிஇஓ, அனுவதினி ஏஐ, சிசிஓ, எஐசிடிஇ, டெல்லி) கலந்து கொண்டு பல்துறைகளில் சாதனை புரிந்த பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரி வருகை பேராசிரியர் டாக்டர் ராஜசேகரனுக்கு விருது வழங்கினார். அருகில் கே.பி.ஆர். குழும சேர்மன் டாக்டர் கே.பி.ராமசாமி உள்ளிட்டோர்.