வால்பாறை உள்கோட்ட காவல் நிலையப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வால்பாறை மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் சி.விஜயகுமார் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வால்பாறை உள்கோட்ட காவல் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளில் வால்பாறை உள் கோட்டப்பகுதிகளில் 91 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 45,174 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 127 பேரை கைது செய்து அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 10 பேரின் வங்கிக் கணக்குகளும் 2023 ம் ஆண்டு இதுவரை 16 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப் பட்ட தொகை ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 971 ஆகும்.