சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் அன்னூர் ஒன்றியம் ப.புதுப்பாளையம் ஊராட்சி நடுநி லைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறுவன தலைவர் டாக்டர் செல்வக்குமார், பொருளாளர் கவிதா, துணைத் தலைவர் சுதா, நிர்வாக இயக்குனர் ரஞ்சித்குமார் மற்றும் திரளான பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.