fbpx
Homeபிற செய்திகள்மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெற்ற 541 மனுக்கள் மீது நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெற்ற 541 மனுக்கள் மீது நடவடிக்கை கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

இலவச வீடு கோரி 52 மனுக்கள், வருவாய்த் துறை தொடர்பாக 290 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 5 மனுக்கள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக 194 மனுக்கள் என மொத்தம் 541 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், குறித்த காலத்திற்குள் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) துஷார் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் ப.நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்த குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) வாணிலட்சுமி ஜெகதம்மாள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img