Homeபிற செய்திகள்நவ இந்தியாவில் உள்ள இந்தியன் டெரைன் புதுப்பிப்பு

நவ இந்தியாவில் உள்ள இந்தியன் டெரைன் புதுப்பிப்பு

ஆண்களுக்கான பார்மல்ஸ் & ஸ்மார்ட் கேசுவல்ஸ் சட்டைகள், டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் வகை ஆடைகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான ‘இந்தியன் டெரைன்’ கோவையில் உள்ள அதன் 9 பிரத்தியேக ஷோரூம்களில் ஒன்றான நவ இந்தியாவில் அமைந்துள்ள அதன் 5வது ஷோரூமை முழுவதுமாக புதுப்பித்து மீண்டும் திறந்துள்ளது.

இந்த கிளையை, இந்தியன் டெரைன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரத் ராம் நரசிம்மன் மற்றும் இந்த கிளையின் பிரான்சைஸி அரவிந்த் முன்னிலையில் ஸ்ரீ குமரகுரு மில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுஷ் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் சரத் ராம் நரசிம்மன் பேசுகையில், 

“சென்ற நிதியாண்டில் இந்தியன் டெரைன் ரூ.460 கோடி வருவாய் ஈட்டியது. நிகழும் நிதியாண்டில் அதை விட 10% கூடுதலாக வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

கடைகள் மூலமாக மட்டுமல்லாது, ஆன்லைன் மூலமாகவும் இந்நிறுவனத்தின் விற்பனை ஜோராக நடைபெற்றுள்ளது. 

கோவையில் மட்டும் ‘இந்தியன் டெரைன்’ நிறுவனத்திற்கு 9 பிரத்தியேக கிளைகள் உள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img