கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், காமராஜ் நகர் (கே.வி.கே நகர்) மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.41.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர் நிவேதா சேனாதிபதி, உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.