fbpx
Homeபிற செய்திகள்பிசியோதெரபி கல்லூரி விளையாட்டு விழா

பிசியோதெரபி கல்லூரி விளையாட்டு விழா

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்விக் குழுமங்க ளின் அங்கமான பிசியோதெரபி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நான்கு நாட்கள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் தடகளப் போட்டி கள் நடத்தப்பட்டன.

விழாவுக்கு ஆர்.வி.எஸ். பிசியோதெரபி கல்லூரி முதல்வர் பிராங்கிளின் சரஜு, யுனைடெட் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற் றும் தலைவர் சண்முகம், பிசியோதெரபி கல்லூரி முதல் வர் காயத்ரி ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. மாணவர்களுக்கு கால்பந்து, வாலிபால் கிரிக் கெட், கபடி போட்டிகளும், மாணவிகளுக்கு த்ரோபால், இறகுப்பந்து, கோகோ போட்டிகளும் நடத் தப்பட்டன.
100 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலாம் ஆண்டு மாணவன் விக்ரம் முதலி டத்தையும், இரண்டாம் இடத்தை ருத்ரமூர்த்தி, மூன்றாம் இடத்தை பிரபாகர் ஆகி யோர் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் 100 மீட்டர் போட்டியில் வைஷாலி முதலிடத்தையும், கில்டா இரண் டாம் இடத்திலும், ஆதிலட்சுமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
200 மீட்டர் ஓட்ட பிரிவில் அருண் பாண்டியன் முதல் இடத்தையும், ஆசிப் இரண் டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை விக்ரம் பெற்றனர்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், உடற்கல்வியும் பிசியோதெரபி ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி முறை. விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கும் அதிலிருந்து மீண்டு வரும் சிகிச்சை அளிப்பதும் பிசியோதெரபி என்று குறிப்பிட்டார். விளையாட்டு அறிக்கையை உடற்கல்வித்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வாசித்தார்.

படிக்க வேண்டும்

spot_img