சத்தியமங்கலத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை (அட்மா) வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட் டத்தின் கீழ் கிஷான் கோத்தீஸ் வயல் விழா நடைபெற்றது
சத்தியமங்கலம் வட்டாரம் வேளாண்மை- உழவர் நலத்துறை (அட்மா) வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கிசான் போத்தீஸ் வயல் விழா கொமாரபா ளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் மற்றும் சத் தியமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் வேலுச்சாமி வேளாண்மை உதவி வேளாண்மை அலுவலர் உமா மகேஷ் தோட்டக்கலை உதவி இயக்குனர் சாந்தி மற்றும் கோபிசெட்டிபாளையம் மைராடா கே வி கே வேளாண் விஞ்ஞானி சரவணகுமார் பவானிசாகர் வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானி வாகேஸ்வரன் மற்றும் கால்நடை மருத் துவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் வேலுச்சாமி அவர்கள் தலைமை உரை யாற்றினார் மேலும் வேளாண்மை அலு வலர் உமாமகேஷ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் கூறினார்.
உழவன் செயலி பற்றி அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் மற்றும் உதவி தொழில் நுட்பம் மேலாளர்கள் நந்தினி , வீரமணி ஆகியோர் விளக்கமாக கூறினார் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகளுக்கு உழவன் செயலியை பதிவிறக்கம் செய்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமாக கூறினார் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ராஜ்குமார் அவர்கள் மாநில திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக் கமாக கூறினார்.
மேலும் விழாவில் வேளாண்மை ஆத்மா திட்டம் உழவர் ஆலோசனைக் குழுத் தலைவர் செல்வராஜ் அவர்களும் உதவி வேளாண்மை அலுவலர் கோகிலா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பட்டுகளை ஆத்மா திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.