fbpx
Homeபிற செய்திகள்யுனைடெட் கல்லூரியில் அறிவியல் துறை மாணவர்களுக்கான முதலாண்டு தொடக்க விழா

யுனைடெட் கல்லூரியில் அறிவியல் துறை மாணவர்களுக்கான முதலாண்டு தொடக்க விழா

பெரியநாயக்கன்பாளையம், யுனை டெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் (28ம் தேதி) கல்லூரி யின் அறிவியல் துறை சார்ந்த முதலாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

குத்து விளக்கேற்றபட்டு துவங்கப்பட்ட இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.விஜயா வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று பேசினார். யுனைடெட் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் இன்ஜி னியர் எஸ்.சண்முகம் தலைமையுரையாற் றினார்.

அவர் பேசுகையில், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வுக்கு எல் அண்ட் டி நிதி சேவைகள் துறையின் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் கவுதம் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே உரையாற்றினார்.

தம்முடைய கல்லூரி காலங்களிலே தாம் பயிலும் கல்வியின் மேன்மையினை உணர்ந்து, கல்வி கற்று, தம் பெற்றோர்களுக் கும், ஆசிரியர்களுக்கும், தம்முடைய கல்வி நிறுவனத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி மாணவர்களிடம் உரையாற்றினார்.

யுனைடெட் கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் முனைவர் வி.கைலாஷ்குமார் சிறப்புரையும், யுனைடெட் கல்வி நிறுவனத்தின் செயலர் வி.அருண்கார்த்திகேயன் வாழ்த்துரையும் வழங்கினார்கள். கல்லூரியின் முன்னாள் மாணவர் செல்வன் புவனேஸ்வரன் தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

முதலாண்டு மாணவரில் ஒருவரும், அவர்தம் பெற்றோரும் தம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியிலே கணினி அறிவியல் துறையின் தலைவர் முனைவர் பாலகுமார் நன்றியுரை வழங்கினார்.

முதலாண்டு மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், கல்லூரியின் துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்நிகழ்விலே கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img