fbpx
Homeபிற செய்திகள்நீளும் உக்ரைன் போர் உடனே முடியட்டும்!

நீளும் உக்ரைன் போர் உடனே முடியட்டும்!

உக்ரைன்& ரஷ்யா போர் 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனும் நேட்டோவும் ஒரு பக்கம், ரஷ்யா ஒரு பக்கம் நிற்கின்றன.

வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் இன்னமும் தாக்குப்பிடித்து நிற்பது, உலகில் உள்ள சிறு நாடுகளுக்குப் புதிய வகை நம்பிக்கையை ஏற்படுத்தக்-கூடியதாக இருக்கிறது.

உக்ரைன் போரின் ஓராண்டைக் குறிக்கும் வகையில் அந்த நாட்டிற்குத் திடீர் வருகை அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளும் இதர உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, ரஷ்யா-வுக்கு எதிரான மேலும் தடைகள் அமலாகும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் உக்ரைன் வருகைக்கு அடுத்த நாளன்று ஓர் அறிவிப்பு விடுத்த ரஷ்ய அதிபர் புதின், நீண்ட நெடுங்காலப் போருக்குத் தன் நாடு தயார் என்று சவால் விடுத்தார்.

அதோடு, மட்டுமன்றி ‘நியூ ஸ்டார்ட்’ என்ற அணு ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்-பாட்டில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக விலகத் தயார் என்பதைக் கோடிக்காட்-டும் வகையில் புதின் தடாலடியாக ஓர் அறிவிப்பும் விடுத்தார்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்-ணாக எஞ்சி இருக்கும் ஒரே ஓர் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்பாடு இது-தான். ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு காரணமாக அணு ஆயுதப் போட்டா-போட்டி ஏற்படக்கூடிய வாய்ப்பும் தலைதூக்கி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவை நேரடியாக குறை சொல்லாத சீனா, போர் ஓராண்டைக் கடந்துவிட்டதை அடுத்து, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு யோசனைய முன்வைத்து உள்ளது.
அந்த யோசனை தொடர்பில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்து பேசத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடந்து வரும் போரின் முதல் ஆண்டைப் பார்க்கும்போது, அந்தப் போர் எல்லா தரப்புக்குமே பேரழிவாகத்தான் இருந்து வந்திருக்கிறது. கூடிய விரைவில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டு அதில் தோற்றுவிட்ட ரஷ்ய அதிபர், உக்ரைனுக்கு இந்த அளவுக்கு மேற்கத்திய நாடு-களின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை போலும்.

உக்ரைன் போர், அந்த நாட்டுக்கு உள்ளே நடக்கிறது. ஆகையால் அந்த நாடு பெருத்த உயிர்ச்சேதத்தை எதிர்நோக்கி வருகிறது. அடிப்படை கட்டமைப்பு-கள் சீர்குலைந்துவிட்டன, தொடர்ந்து சீர்குலைந்து வருகின்றன.

ரஷ்யாவுக்கும் பெருத்த உயிர் சேதத்தை உக்ரைன் உருவாக்கி இருக்கிறது, உருவாக்கி வருகிறது. உக்ரைன் போர் நீடித்தால் அதன் விளவாக ரஷ்யாவும் நேட்டோவும் நேரடியாக மோதக்கூடிய நிலை ஏற்பட்டுவிடலாம்.

இப்போதைய உலகில் வல்லரசுகளுக்கு இடையில் பகிரங்க போர் மூண்டால் அணு ஆயுதங்கள் மூலம் எந்த அளவுக்குப் பேரழிவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

எந்த ஒரு போரும் ஒரு வெற்றியில் போய் முடியும். அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். உக்ரைன் போரின் ஓராண்டு நிலவரத்தைப் பார்க்கை-யில் ராணுவ படை பலம் மூலம் யாருக்கு வெற்றி கிட்டும் என்று தெரியவில்லை.

ஆகையால், பேச்சுவார்த்தை ஒன்றுதான் வழி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதை மனதில் கொண்டு ரஷ்யா, உக்ரைன், மேற்கத்திய நாடுகள், இந்தியா, சீனா உள்-ளிட்ட அனைத்து தரப்புகளும் செயல்பட வேண்டும். உக்ரைனில் அமைதி நிலவ வழிகாண வேண்டும்.

இப்போதைய உலகில் உக்ரைனில் அமைதி ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அது நடக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் பிரார்த்தனையாக உள்ளது!

படிக்க வேண்டும்

spot_img