கிருஷ்ணகிரியில் பரோடா வங்கியின் சார்பில் வட்டி வகிதத்தை மலிவாக குறைத்து கடன் வழங்குவது குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய வளாகத்தில், பரோடா வங்கியின் சார்பில், சிறு, குறுந்தொழில்கள் மற்றும் வீடுகள் கட்ட, வாங்க, தொழில் அபிவிருத்திக்கான கடன்கள், மாநில மற்றும் மத்திய அரசு கடன் மானியங்களுடன் வட்டி விகிதத்தை மலிவாக குறைத்து கடன் வழங்குவது குறித்து கருத்தரங்கம் நடந்தது.
அப்போது, ஒவ்வொரு தொழிலுக்கான கடன்கள், வட்டி விகிதங்கள், பிணையில்லாத கடன்கள், ஏற்கனவே உள்ள கடனை அடைத்து புதிய கடன் பெறுவது குறித்து பல விளக்கங்கள் மற்றும் கையேடுகளுடன், புதுச்சேரி பிராந்தியத்திலிருந்து சிறு தொழிலுக்கான முதன்மை மேலாளர் ஜெயபிரசாத் எடுத்துக் கூறினார்.
மத்திய, மாநில அரசின் கடன் திட்டங்கள் மற்றும் அதற்கான மானியங்கள் குறித்து மாவட்ட தொழில்மைய திட்ட மேலாளர் ராமமூர்த்தி விளக்கினார். முன்னதாக கிருஷ்ணகிரி பரோடா வங்கியின் முதுநிலை மேலாளர் சுகுணாதேவி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் விஸ்வநாதன், தமிழ்நாடு சிறு தொழில் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், மாவட்ட துணைத் தலைவர்கள் முரளிகணேசன், சிவக்குமார், மாவட்ட சங்க உறுப்பினர்கள் கவியரசு, ஸ்ரீபதி, மாவட்ட இணை செயலாளர் நாகமணி மற்றும் சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி மேலாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.