கோவை காந்திபுரம் மங்களா ஓட்டல் அரங்கில், யூகோ வங்கி சார்பாக சிறப்பு வீட்டுக்கடன் மேளா நடந்தது. ஒரு நாள் நடைபெற்ற இந்த முகாமை யூகோ வங்கியின் கோவை மண்டல மேலாளர் ஜோதீஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முதன்மை மேலாளர் மணி பூஷன், வங்கியின் கடன் பிரிவு முதன்மை மேலாளர் தேவி, கோவை கிளை முதன்மை மேலாளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.
பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கனவு இல்லத்தை நனவாக்குவதற்காக கோவையில் முதன் முறையாக நடைபெற்ற இந்த கடன் மேளாவில், 20-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனத்தினர் அரங்குகள் அமைத்திருந்தனர்.
யூகோ வங்கியில் 8.35 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும், வீடு கட்ட மற்றும் வாங்க நினைப்பவர்கள், அருகாமையில் உள்ள யூகோ வங்கியை அணுகி கூடுதல் விவரங்கள் பெறலாம் எனவும் மண்டல மேலாளர் ஜோதீஷ் தெரிவித்துள்ளார்.