fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் விதை விதைப்பு விழா

சிமாட்ஸ் விதை விதைப்பு விழா

சிமாட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங், சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸின் தண்டலம் வளாகத்தில் உள்ள வேளாண் பொறியி யல் விதை விதைப்பு விழாவை நடத்தியது.

சிமாட்ஸ் வேந்தர் டாக் டர் என்.எம். வீரையன், SSE இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக், SSE முதல்வர் டாக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேளாண் பொறியியல் படிக்கும் மாணவர்கள் சமகால விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ஏராளமான பண்ணைக் கருவிகள் மற்றும் விவசாய வயல்களின் மண் மற்றும் நீரின் தரத்தை இயந்திர கற்றல் அடிப்படையிலான மதிப்பீடு பற்றி விளக்கினர்.

விவசாய நிலைத் தன்மைக்காக சிமாட்ஸ் (SIMATS)–ல் பயன்படுத்தப் படும் அதிநவீன சமகால முறைகளை நிரூபிக்க, SSE ட்ரோன் ஆய்வகத்திலிருந்து ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

SSE வேளாண் பொறியியல் துறை முழு நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தது.

படிக்க வேண்டும்

spot_img